Books

The Founder is the author of 21 books widely about health, nature and Spirituality. All the books are available at Anbuneri Publications.

Contact

+91 94885 12351

வானியலும் ஜோதிடமும்

“மனித மனம் எந்த அளவு விரிவடைகின்றதோ அந்த அளவுக்குத்தான் ஒருவர் வினைப்பதிவுகளிலிருந்து விடுபட முடியும். அவ்விரிவில் இறையுணர்வும், அறநெறியும் இயல்பாகும்.
எல்லையற்ற அகன்ற வானில் உலவும் கோள்களைப் பற்றிய வானியல் ஞானம் அறிவுக்கு முழுமையை அளித்து மனிதனுக்கு முக்தியை அளிக்கவல்லது. ஆழ்ந்த ஆராய்ச்சியோடு தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல் எல்லாத் துறைகளையும் சேர்ந்த அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகும். மனவளக்கலை பயிலும் அனைவருக்கும் இது சிறந்த வழிகாட்டியாகும்”.

அருட்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள்
நிறுவனர்,
உலக சமுதாய சேவா சங்கம்.

மனதை அளக்கும் கருவி

“அருள்நிதி M.K.தாமோதரன் அவர்கள் மனவளக் கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னையே இந்த பரீட்சையில் ஈடுபடுத்திக் கொண்டு அகத்தவத்தின் போது ஏற்படும் விளைவுகளை எல்லாம் ஆராய்ந்து தெளிந்து எல்லோருக்கும் பயன்படுமாறு இந்த நூலை எழுதியுள்ளார். அவர்கள் அனுபவங்கள் அனைத்தையும் கொண்டு எழுதிய இந்நூல் எல்லா மனவளக் கலைஞர்களுக்கும், அறிவுக்குத் துணை செய்யுமாக. இத்தகைய பெருமை வாய்ந்த நூலை ஆன்மீக அன்பர்களுக்கு அளித்துள்ள ஆசிரியரை மன்றங்களின் அன்பர்கள் சார்பில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்”.

தத்துவஞானி யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள்
நிறுவனர்,
உலக சமுதாய சேவா சங்கம்

பேரின்ப களிப்பு

பேரின்ப களிப்பு

“இந்திய திருநாட்டில் தோன்றிய பிரம்மஞான உரைகளுக்கு பேராசிரியர் M.K.தாமோதரனார் உரை தாய்மையும், தலைமையும் தருகின்றது. தத்துவ இலக்கியத்தில் இவர் உரை உயிர்பாகத் திகழ்ந்து மனிதகுல மேம்பாட்டிற்கு இன்றும், நாளையும் ஒளிபாய்ச்சும் வல்லமை உடையது.

முனைவர் திருமா.பூங்குன்றன் M.A, B.Ed, M.Phil, Ph.d.

முதல்வர்,
மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரி.
“ஆன்மீக அன்பர்கள் பலரை உருவாக்கும் அருட்பணியில் தொண்டாற்றும் வணக்கத்திற்குரிய பேராசிரியர் M.K.தாமோதரன் அவர்கள் வடித்த “பேரின்பக் களிப்பு” எனும் நூல் அன்னவர் தம் ஆழ்ந்த ஆன்மீக செறிவை அழகுற எடுத்தியம்புகின்றது”.

முனைவர் மங்களவதி கேபிரியல் M.A, M.A, M.S, M.Phil, Ph.D, B.D

தமிழ் பேராசிரியர் (பணி நிறைவு)
எம்.வி.எம். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திண்டுக்கல்

இயேசு காட்டும் யோகம்

“வாழ்வுதரும் வார்த்தையான விவிலியத்திலிருந்து மக்களின் அனுதின வாழ்விற்கு வழிகாட்டியாக அமையக்கூடிய பல வசனங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு விளக்கம் அளித்து, அவற்றை நம் வாழ்வின் முன்னேற்றத்திற்காக எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை வெகு அழகாக எடுத்துரைக்கின்றார் பேராசிரியர் M.K.தாமோதரன் அவர்கள். மேலும் விவிலிய வசனங்களுக்கு தொடர்புடைய நம் நாட்டு பக்திமான்களின் கருத்துக்களையும் தொகுத்து நமக்கு வழங்கியுள்ளார். இந்நூலைப் பயன்படுத்தி யோக வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன்”.

Rev. Fr. Dr.S.இன்னாசிமுத்து M.Sc, M.Phil, Ph.D, DSC, FRES
DIRECTOR, ENTOMOLOGY RESEARCH INSTITUTE
LOYOLA COLLEGE, CHENNΑΙ

தவத்திரு சாது ஸ்ரீ கருணாம்பிகை

திருவாளர் தாமோதரன் அவர்கள் – ஸ்ரீ சாது கருணாம்பிகையின் சரிதத்தை வெகு அருமையாக எழுதியுள்ளார். ஒரு ஞானியின் பெருமைகளை நன்கு தொகுத்து எழுதியுள்ளார். இல்லறத்தில் தோன்றிய ஞானசக்தியை நன்றாக விமர்சித்துள்ளார்.

“எங்கும் நிறைந்த அருளே – சாது
கருணா அம்பிகை குருவே” என்ற பாடல் சிறப்பு வாய்ந்தது.

ஞானிகள், பக்தர்கள் இருக்கும் இடமே கடவுள் வாழும் கோவில் என்பதை இந்நூல் நமக்கு தெளிவுப்படுத்துகிறது”.

கலைமாமணி தவப்பெருந்திரு பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் சென்னை.

ஸ்ரீ மகா துர்க்கா வழிபாடு

“பக்தியில்லாத ஞானம் மனதில் வெறுமையைத் தோற்றி வைத்து இறுதியில் மனசஞ்சலத்தையும், கவலையையும் தரும். ஞானம் இல்லாத பக்தி அறிவை அடிமையாக்கி சுயநலத்தையும், கடும் பற்றையும் தோற்றுவிக்கும். பக்தியும், ஞானமும் இணைந்ததே வாழ்க்கைப் பாதையை சீரமைத்து முக்தியை அளிக்கும்.

முக்தியே பக்தியின் பெரும் பயன் ஆகும். பக்தியின் இலக்கணம் எல்லா செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதும், இறைவனை மறக்கும் பொழுது மனம் துன்புறுதலும் ஆகும். இறைவனையே நாடுகின்ற பக்தர்கள் இறைவன் நாமத்தை உச்செரித்தவுடன் மயிர்கூச்செறிய, கண்ணீர்மல்க இறைவன் நினைவில் மூழ்குபவராக இருப்போர் முக்திப் பாதையில் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஸ்ரீ மகா துர்க்கா வழிபாட்டு
நூல் அம்மனின் பாடல்களின் தொகுப்பாக இருந்து பக்தர்களுக்கு உதவுகிறது”.

எண்ணெய் கொப்பளித்தல்

“உடலுக்குப் போதிய பயிற்சியும், ஓய்வும் கொடுத்தால் இயற்கையே எல்லாவித நோய்களையும் மீண்டும் சரி செய்து தருகிறது. அவ்வாறான பயிற்சிகளில் ஒன்றுதான் எண்ணெய் கொப்பளித்தல். உடலில் இரத்த ஓட்டத்தை உயிர்பித்து பல நோய்களை போக்கும் இந்த எளிய பயிற்சியை அறிந்து அறிவித்தவர் சோவியத்து நாட்டை சேர்ந்த Dr. மெத்காரஸ். அதை நமக்கு ஏற்றவாறு மிக எளிமையாக வடிவமைத்துக் கொடுத்துள்ளேன். இன்புற்று வாழ்க”.

-ஆசிரியர்

சித்த மருத்துவம்

“சித்த மருத்துவம் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
தங்களின் உடலையும், உயிரையும் சித்த மருத்துவ முறையில் பேணுவது பற்றி நன்கு அறிந்து நமக்கும், பிறருக்கும் உதவும் வகையில் அறிவியல் ரீதியாக சித்த மருத்துவத்தை ஆய்வு செய்து இந்நூலை எழுதிய மனவளக்கலை பேராசிரியர் M.K.தாமோதரன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்”.

முனைவர் ஞா.பங்கஜம் அவர்கள்
துணைவேந்தர்,
காந்திகிராம பல்கலைக்கழகம்

சித்தன் பதில்கள்

“ஆன்மீகத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆன்மீக குருக்களின் மூலம் பெறும் பதில்கள் ஆண்டவனைச் சென்றடைய உதவும்.

சித்தர்கள் பொதுவாகத் தன் சித்தத்திற்கு எட்டியதை சீடனுக்கு எடுத்துரைத்தது போக சிலவற்றைக் குழுக் குறியாகச் சொல்லி வைப்பதுண்டு. ஆனால் அது பெரும்பாலும் சிறியோர் சிந்தனைக்கு எட்டுவதில்லை.

உண்மை விளக்கம் அனைவருக்கும் கிட்டுவதில்லை. சூத்திரங்கள் பலவற்றைச் சூட்சமமாகச் சொல்வதால் சுலபத்தில் அர்த்தமாவதில்லை. ஆனால் அதற்கு விதி விலக்கு இந்த “சித்தன் பதில்கள்”. சித்தன் பதில்கள் அனைவருக்கும் அர்த்தம் புரியும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளது”.

யோகிராஜ் ஜெயகிருஷ்ணன் சுவாமிகள்.
நவயுகம்.

கீதை காட்டும் பாதை

“அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட குழப்பம் நீங்க “க்ஷத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வா உத்திஷ்ட்ட பரந்தப” நெஞ்சின் பலஹீனத்தை உதறி தள்ளிவிட்டு முழு பலத்துடன் ஒரு செயல்வீரனாக எழுந்து நில்’ என்று உபதேசம் செய்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

பற்றும், பற்று விடுதலும், கர்மமும் அதன் செயல்களையும் பற்றி விளக்கம் தனக்கே உரிய பாணியில், ஆசிரியர் பிரபஞ்ச தத்துவத்தையும் கையாண்டு தெளிவுபடுத்தும் விதம் பாங்கானது.

குழப்பத்தோடு வந்தவர்கள் இந்நூலைக் கற்றுணர்ந்த பின் குழப்பம் நீங்கித் தெளிவு பெறுவர். உயர்வுற உயரிய நலம் பெற வேண்டும் என்பது என் பிரார்த்தனை.

சுவாமி நித்ய சத்வானந்தா அவர்கள்,
தலைவர்,
ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம்.
திண்டுக்கல்-5

பாரத மகான்கள்

“பாரத தேசத்தில் வாழ்ந்த பல மகான்கள் நம் நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே வழி காட்டியிருக்கிறார்கள். அந்த மகான்கள் வெறும் உபதேசம் மட்டும் செய்யாமல், வாழ்ந்தும் காட்டி இருக்கிறார்கள். அவர்களுடய வாழ்க்கை நெறிகளை தெரிந்து கொள்வதன் மூலம், நாமும் அத்தகைய நிலையை அடையவும், நம் சாதனைக்கும் மிக்க உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தெய்வீக வாழ்க்கை வாழ்ந்து, இறையுண்ர்வு பெற்று, அந்த உயர்ந்த நிலையை பெற விரும்புகிறவர்கள், அந்த வழியில் வாழ்ந்த மகான்களின் கருத்துக்களையும், வாழ்க்கை முறைகளையும் படிப்பது, சிந்திப்பது நல்ல ஊக்கத்தைக் கொடுக்கும்.

ஆன்மீக சாதகர்களுக்கு மிகவும் பயன் தருகின்ற வகையிலே, “பாரத மகான்கள்” என்ற இந்த தொகுப்பு நூலை வழங்கிய அ/நி.M.K.தாமோதரன் அவர்களுக்கு அன்பான வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறேன்”.

பத்மஸ்ரீ . எஸ். கே. மயிலானந்தன்
தலைவர்
உலக சமுதாய சேவா சங்கம், சென்னை

அமுத மொழிகள்

“உலக சமுதாய சேவா சங்கம் சிறப்பாகச் செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக வேதாத்திரிய தத்துவங்களைப் போதிக்கிறது. ஸ்ரீ வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்துக்களை உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத்தலைவர், மனவளக்கலைப் பேராசிரியர் M.K.தாமோதரன் அவர்கள் இந்நூலில் நன்கு எடுத்து விளக்கியுள்ளார். பல ஆண்டுகள் மகரிஷியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு அவர் தனிப்பட்டவர்களிடமும், குழுவினரிடமும் பேசிய பேச்சுக்களில் இருந்தும் அவர் வாழ்ந்த முறைகளில் இருந்தும் அவரது தத்துவக்கருத்துக்களை நன்கு திரட்டி இந்நூலில் நமக்கு அளித்துள்ளார்கள். இவரது இந்த சேவை மகத்தானது. மகரிஷியை புரிந்து கொள்ள இந்நூல் ஒரு வழிகாட்டி”.

முனைவர் க.குழந்தைவேல் அவர்கள்
வேந்தர்
அவினாசி லிங்கம் மனையியல்
மற்றும்
உயர்க் கல்வி நிகர் நிலைப் பல்கலைகழகம் கோயம்புத்தூர்

வீட்டின் காந்தகளம்

“ஒரு வீடு கட்டுவதற்கு அகலம் – நீளம் – உயரம் – குறிப்பிடுகிறோம். இது வான்காந்த ஆற்றலுக்கு எல்லை கட்டுவதாகும். அதற்கு ஏற்ப அந்த இல்லத்தில் வாழும் நபர்களுக்கு நலம் – தீது உண்டாவதை அறிகிறோம்”.

அருட்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள்
நிறுவனர்,
உலக சமுதாய சேவா சங்கம்.

“ஸ்ரீ வேதாத்திரி மகரிஷியின் வாக்கு இல்லத்தில் தொடங்கி உலகம் முழுவதும் பரவும் அமைதி நெறி விளக்கமாகும். இல்ல அமைப்பு அறிவியல் இலக்கண முறையில் முன்னோர் வகுத்த வாஸ்தின்படி அமையும்பொழுது பரிபூரண அமைதியையும் இன்பத்தையும் அளிக்க வல்லதாகும்”.

முனைவர் பெ.கன்னியப்பன் அவர்கள்
துணைவேந்தர்
அழகப்பா பல்கலைகழகம்

ஒரு கிராம தேவதையின் தர்மயுத்தம்

“பெண்கள் சக்தியின் வடிவம். பெண்களால் காவியம் தோன்றுவது இது முதல் முறையல்ல. இராமாயணம், மஹாபாரதம் காலம் தொட்டு இது தொடர்கிறது”.

“வானுரையும் தெய்வத்திற்கு வரலாறு இல்லையெனில் வணங்கும் பக்தனுக்கு மன உயர்வு கிட்டாது வந்துதித்த பெரியோர்க்கு வரலாறு இல்லையெனில் வளரும் தலைமுறைக்கு வாழ்க்கை முறை தெரியாது” தொடர்ந்து படியுங்கள்”.

ஆசிரியர்

EEG - ENGLISH

CAN THE MIND BE MEASURED
This Book “can the mind be measured?” is an apt one in this scientific era. We all know the feelings that occur out of the experience of joys and sorrows. If the machine EEG is connected to our body, the monitor shows accurately the frequencies at different states of mind.

In order to help the practitioners of SKY, Arulnithi M.K.Dhamodharan involved himself in this experiment. He has noted the effects of meditation on the mind and jotted down the results in the form of a book. The practitioners of SKY are greatly indebted to him.

I congratulate and Bless Arulnidhi M.K.Dhamodharan on behalf of the members of the SKY
family.

YOGIRAJ VETHATHIRI MAHARISHI
FOUNDER
THE WORLD COMMUNITY SERVICE CENTRE

INDIA THE LAND OF MAHANS

“ One who wants contented life should live divine life and also get spiritual power in order to get highness of life, they must read this mahans way of living and analyze to encourage themselves “.

Padmashree SKM. MAYEILANANTHAN,
PRESEIDENT
THE WORLD COMMUNITY SERVICE CENTRE
CHENNAI.

வான் துளி

மலையின் உச்சியில் விழும் வான்துளி, தானே வழி கண்டு கடலில் சென்று கலப்பதைப் போன்றது, இக்கவிகள். அவ்வப்போது மின்னலெனத் தோன்றிய சிறுதுளிகளின் தொகுப்பே இது.

அன்புடன்,

பத்மஸ்ரீ . எஸ். கே. மயிலானந்தன்
தலைவர்
உலக சமுதாய சேவா சங்கம், சென்னை

மனைவியர் தினம்

குடும்ப உறவுகளில் அனைவரையும் கௌரவிக்கும் ஒரு நாள் இருக்கும் பொழுது, உறவினர் வீட்டுத் தோட்டத்தில் பூத்து, தன் வீட்டில் மலர இருக்கும் மருமகளுக்கென்று ஒரு சிறப்பு நாள் இல்லை. அவள் தானே பின்னாட்களில் நல்ல வாழ்க்கைத் துணையாக, வீட்டை நிர்வகிக்கும் மதிமந்திரியாக, குழந்தைகளுக்கு ஆசானாக, இன்பதுன்பத்தில் சரிபாதி பங்கேற்கும் தோழியாக…மகரிஷி அவர்களின் மனைவியர் தினவிழா பற்றிய ஆசிரியரின் தொகுப்பு.

பத்மஸ். எஸ். கே. மயிலானந்தன்
தலைவர்
உலக சமுதாய சேவா சங்கம், சென்னை

நில் கவனி

பல்வேறு மகான்களின் கருத்துக்களை, அருட்தந்தையின் கருத்துக்களோடு ஒப்பிட்டு எழுதுவதில் சிறந்த வல்லமை கொண்டவர். மனதை ஒழுங்குபடுத்தி இந்நூலை வாசித்தால், பல மெய்ஞானக் கருத்துக்களும், தத்துவங்களும் விளங்கும்.

” சிறந்த பேச்சு ஒரு நேர்மையான பொய்.
மோசமான மௌனம் ஒரு நிர்வாணமான உண்மை”.

Answers of the Siddhan

Wisdom dawns and begins to blossom mind remains focused on itself and its origins; and wisdom is the tool that helps the individual surmount the obstacles and problems in life.

திருக்குறள்(அறத்துப்பால்-தெளிவுரை)

இவரின் உரை ஒளிபாய்ந்து இருள் அகலும் காலம், மானுட வெளி முழுவதும் முப்பால் நின்று மேன்மைப்படுத்தும் காலம். குறள் வாசகர்களின் நெஞ்சத்தில் உரையாசிரியர் தனி இடம் காணும் காலம். அதுவே தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மகிழ்காலம்.

முனைவர் திருமா.பூங்குன்றன் MA., M.Sc(Yoga) B.Ed., Ph.D.
இயக்குநர்,
மதர் தெரசா கல்விக் குழுமம்.

Scroll to Top